மகிழ்ச்சியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அந்தோணி தாஸ்

நத்தம்: தமிழ்நாடு கிரிக்கெட் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சைத் தோற்கடித்தது. வேகப்பந்து வீச்சாளரான 28 வயதான அந்தோணி தாஸ் பந்தடிப்பிலும் ஜொலித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். “கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நான் ஆட்டநாயகன் விருது வாங்கினேன். ஆனால் அது சிறந்த பந்து வீச்சுக்காக. இந்த முறை பந்தடிப்பிற்காக பெற்றிருப்பதை சிறப்பானதாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியான தருணமாகும்.

“களத்தில் நான் நிலைத்துவிட்டால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பது தெரியும். அதனால் ஏதுவான பந்துகளுக்காக காத்திருந் தேன். சூழ்நிலையைத் துல்லியமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்ப பந்துகளை அடித்து விளாசினேன். “கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு தியோதர் கிண்ணத்துக்கான தமிழக அணியில் எனக்கு இடம் கிடைத்தது. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி “என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கும் பந்தடிப்புத் திறமையை மேம்படுத்துவதற்கும் உதவிகரமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நான் ஆட்டநாயகனாக முத்திரை பதிக்க வேண்டும் என்று எனது குடும்பத்தினர் கூறினார்கள்,” என்று அந்தோணி தாஸ் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி