‘ஹாட்ரிக்’ வெற்றி நம்பிக்கையில் இந்தியா

பல்லகெலே: இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்ல கெலேயில் இன்று சனிக்கிழமை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி ‘ஹாட்ரிக்’ சாதனை புரியும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின் றனர். விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருந்தது.

பந்தடிப்பு மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்வதால் இந்த டெஸ்டிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியா இருக் கிறது. பந்தடிப்பில் புஜாரா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இரண்டு சதங்களுடன் இதுவரை 301 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவருடன் ‌ஷிகர் தவான் (234 ஓட்டங்கள்), அஜின்கிய ரகானே (212 ஓட்டங்கள்), விராத் கோஹ்லி, லோகேஷ், ராகுல் ஆகியோரும் சிறப்பான நிலையில் உள்ளனர். ஓர் ஆட்டம் தடை காரணமாக ஜடேஜா ஆடமுடிமல் போனது பாதிப்பே. ஏனென்றால் அவர் 13 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் இடத்தில் அக் ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அக் ஷர் பட்டேல் முதல் முறையாக டெஸ்டில் ஆடுவாரா? அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஃப்‌ரீ கிக்’ வாய்ப்பு மூலம் கோலை நோக்கி பந்தை அனுப்பும் லயனல் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா, உருகுவே சமநிலை

ஸ்பெயினின் சாவ்ல் நிகேஸுடன் பொருதும் ருமேனியாவின் ஃபுளோரினல் கோமன் (மஞ்சள் நிற சீருடையில்). படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

கோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து