சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர்-இந்தோனீசியா 50 ஆண்டு இருதரப்பு உறவு

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் தங்களுடைய 50 ஆண்டுகால இருதரப்பு உறவை இந்த ஆண்டில் கொண்டாடுகின்றன. இந்த நிலையில் இரு நாடுகளின் மக்களுக்கிடையில் பரஸ்பர தொடர்புகள் இன்னும் விரிவடையவிருப்பதாக துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்து இருக்கிறார். ஜகார்த்தாவில் இருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் நடந்த தேசிய நாள் விருந்தில் பேசிய டியோ, இரு நாடுகளின் இருதரப்பு உறவில் இந்த 2017வது ஆண்டு மிக முக்கிய மான மைல்கல்லாக இருக்கிறது என்றார். சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையில் வலு வான பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை அடிப்படையில் குறிப்பிடத்தக்க இருதரப்பு உறவு பலப்படுத்தப்பட்டு இருப்ப தாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அடுத்த ஆண்டு ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறது. அந்தப் பொறுப்பை ஏற்றதும் இந்தோனீசியாவோடும் இதர ஆசியான் நாடுகளோடும் சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாகப் பாடுபட்டு இந்த வட்டாரத்தில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும், தொடர்பு களைப் பலப்படுத்தும் என்று துணைப் பிரதமர் டியோ தெரிவித்தார். திரு டியோ மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இந்தோனீசியா சென்றார். இந்தப் பயணம் இந்த ஆண்டு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தோனீசியப் பயணமாகும். அவர் இந்தோனீசியாவில் பல உயர் தலைவர்களைச் சந்திப்பார்.

துணைப் பிரதமர் டியோவுடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், கல்வி மற்றும் வர்த்தக தொழில் அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங், தற்காப்பு, வெளியுறவு ஆகியவற்றுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர் ஆகியோர் ஜகார்த்தா சென்றிருந்தனர். படம்: துணைப் பிரதமர் டியோவின் ஃபேஸ்புக்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon