சுடச் சுடச் செய்திகள்

பயணிகளுக்கு உதவும் புதிய நூதனச் செயலி

சாங்கி விமான நிலையத்தின் மிகப்பெரிய தரைவழிச் சேவை நிறுவனம் ‘ரெடி டு டிராவல்’ என்ற புதிய பயணச் செயலியை அறி முகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய செயலி மூலம் பயணிகள் சுற்றுலாத் தளங்கள், பயண முகவர்கள் அளிக்கும் பய ணச் சலுகைகள், விமானப் போக்குவரத்து அட்டவணை மட்டு மின்றி பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள முடியும். ‘சேட்ஸ்’ நிறுவனத்தின் இந்த ‘ரெடி டு டிராவல்’ செயலி மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், வெளியுறவு அமைச்சுடன் தங்கள் விவரங்களை இனைய முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

பயணம் மேற்கொள்ளும் நாடு களுக்கு தகுந்தவாறு பயண அறி விப்பும் ஆலோசனைகளும் வழங் கும் வகையில் இந்தச் செயலி வடி வமைக்கப்பட்டுள்ளது. நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை சிங்கப்பூர், மலே சியா, இந்தோனீசியா, ஆஸ்திரே லியா, பிலிப்பீன்ஸ், ஹாங்காங் போன்ற நாடுகளில் தற்பொழுது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் பல நாடுகள் படிப்படியாக இச்சேவையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் செயலியாக ‘சேட்ஸ்’ நிறுவனத்தின் இந்த ‘ரெடி டு டிராவல்’ செயலி திகழ்கிறது. இணையப்படம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon