வியட்னாமில் டெங்கி காய்ச்சல்; புதிதாக 5,000 பேருக்கு பாதிப்பு

ஹனோய்: வியட்னாமில் டெங்கி காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஹனோய் நகரில் மட்டும் கடந்த இரு வாரங்களில் 5,000 பேருக்கு இக்காய்ச்சல் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். வியட்னாமில் இந்த ஆண்டின் தொடக்கத் திலிருந்து இதுவரையில் மொத்தம் 13,200 பேர் இக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆள் நடமாட்டமற்ற டர்ஃப் கிளப் அவென்யூவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

அச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்

சாக்கியமுனி புத்த கயா ஆலயத்தில் புத்த சிலையின்மீது தங்கத் தகடுகள் வைத்து பலரும் வழிபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

நிம்மதி நல்கும் விசாக தினம்