சிரியாவில் ஐஎஸ் முகாமிலிருந்து தப்பிய இந்தோனீசியக் குழு

ஜகார்த்தா: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தும் ஒரு முகாமிலிருந்து தப்பியோடிய 17 இந்தோனீசியர்கள் அடங்கிய குழுவினர் ஈராக்கிய எல்லைப் பகுதிக்குள் பாதுகாப்பாக நுழைந்துவிட்டபோதிலும் அவர் கள் இன்னும் இந்தோனீசி யாவுக்குத் திரும்பவில்லை என்று இந்தோனீசிய வெளியுறவு துணை அமைச்சர் ஏ.எம் ஃபசிர் கூறினார். கைக்குழந்தைகள், பெண்கள், இளையர்கள் அடங்கிய அக் குழுவினர் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்னும் நாடு திரும்பவில்லை என்று அவர் சொன்னார்.

ஈராக்கிலிருந்து இந்தோனீசியக் குழுவினரை விமானம் மூலம் இங்கு அழைத்து வருவது சுலபம் என்றாலும் ஈராக்கில் ஓரிடத்தைக் கடந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது பல சவால்களை அக்குழுவினர் சந்திக்க வேண்டி யிருப்பதாக திரு ஃபசிர் கூறினார். வெவ்வேறு ஈராக்கியத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல பகுதிகளை அவர்கள் கடக்க வேண்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தோனீசியாவைவிட்டு புறப்பட்ட அந்த 17 பேரும் சிரியாவில் ஐஎஸ் முகாமில் 40 நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.