ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களை நல்லெண்ண அடிப்படை யில் விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடை பெற்றது. இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று பதிலளித்த மத்திய அரசு, குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவித்து உள்ளது.

மேலும், ‘ஆயுள் தண்டனை என்பது குற்றவாளி களின் ஆயுள் முடியும் வரை எனப் பொருள்படும்’ எனக் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, அவர்கள் இருவரையும் விடுவிக்க மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் ராபர்ட் பயஸையும் ஜெயக்குமாரையும் விடுவிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளது.