சுடச் சுடச் செய்திகள்

வெள்ளத்தில் உடைந்த பாலம்; பள்ளத்தில் விழுந்த பேருந்து

திருச்சி: அரியலூர் அருகே செந்துறை - ஆர்.எஸ். மாத்தூர் வழிப்பாதையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. எனவே போக்குவரத்து வசதிக்காக நிண்ணியூர் காட்டு ஓடையில் தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது. கடந்த புதன்கிழமை (ஆக.9) இரவு 8 முதல் 10 மணி வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிண்ணியூர் தற்காலிகப் பாலம் உடைந்து வெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், பெண்ணாடத்தில் இருந்து அரியலூர் நோக்கி சுமார் 30 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து ஒன்று அந்தப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளத்தில் விழுந்த பேருந்து பாரந்தூக்கி மூலம் மீட்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon