பதவி விலக தயாராக இருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழகத்தில் அக்கட்சியை ஆட்சிப் பொறுப்பிலிருந்தே அகற்றிவிடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த தும் அதிமுகவில் அதிகார யுத்தம் தலைதூக்கி விட்டது. ஜெயலலிதாவுக்குப் பின் சசிகலா தான் என்று ஆதரித்தோர்கூட, சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். சசிகலா வெளியில் இருந்தபோதே அதிமுக வில் அவரது குடும்பம் ஆதிக்கம் செலுத்து வதாகக் கூறி, அங்கிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனக்கென ஒரு தனி அணியை உருவாக்கி, தானே உண்மையான அதிமுக என முழங்கி வருகிறார்.

இதற்கிடையில், சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவருடைய சகோதரி மகன் டிடிவி தினகரன், லஞ்சம் கொடுத்து இரட்டை இலைச் சின்னத் தைப் பெற முயன்றதாகக் கூறி கைதானார். இதையடுத்து, சசிகலா, தினகரன் ஆசி யுடன் முதல்வர் அரியணையில் அமர்ந்த எடப் பாடி பழனிசாமி (இபிஎஸ்), இப்போது தின கரனுக்குக் கட்சியில் எந்தப் பதவியும் இல்லை என அறிவித்து, அவர் பங்குக்கு தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். இப்படி அதிமுக மூன்று பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நிலையில், சசிகலா குடும்பத் தாரை ஒதுக்கிவிட்டு, ஓபிஎஸ், இபிஎஸ் அணி கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒன்றிணைய வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக நெருக்கடி கொடுத்துவருவதாகத் தமிழக ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon