ரொக்கமில்லா பொதுப் போக்குவரத்து முறை

வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு முழுமையாக ரொக்கம் இல்லா முறைக்கு மாற இருக்கிறது. பேருந்து, ரயில் பயணங்களுக் கான கட்டணங்கள் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்தப்படும். அதேபோல, பயண அட்டையில் பணம் நிரப்பவும் பணத்தாட்களைப் பயன்படுத்த முடியாது. 2019ஆம் ஆண்டு செயல்பாட் டிற்கு வரவிருக்கும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடம், முழுமையாக ரொக்கமில்லா முறையில் செயல்படும் முதல் ரயில் தடமாக இருக்கும்.

அறிவார்ந்த தேச திட்டத்தை ஒட்டி முழுவதுமாக ‘ரொக்கமில்லா முறை’க்கு மாற இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது என்று நிலப் போக்கு வரத்து ஆணையமும் அதன் துணை நிறுவனமான ‘டிரான்சிட்லிங்க்’கும் நேற்று அறிவித்தன. ரொக்கமில்லா முறைக்கு மாறும் படி பயணிகளைத் தூண்டும் வகை யில், முதற்கட்டமாக செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து அட்மிரல்டி, பிடோக், புக்கிட் பாஞ்சாங், போன விஸ்டா, ஃபேரர் பார்க், ஹார்பர் ஃபிரண்ட், ஹவ்காங், லேக்சைட், பாசிர் ரிஸ், சிராங்கூன், இயூ டீ ஆகிய 11 எம்ஆர்டி நிலையங்களில் இருக்கும் பயணிகள் சேவை மையங் களில் ரொக்கம் மூலம் பணம் நிரப்பும் முறை அகற்றப்படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிலியில் நடைபெறும் ஏபெக் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் உரையாற்றுகிறார். படம்: அமைச்சர் சானின் ஃபேஸ்புக்

19 May 2019

‘ஆழமான வட்டார பொருளியல் ஒருங்கிணைப்பு தேவை’ 

தனிநபர் நடமாட்டச் சாதனங் களைப் பயன்படுத்துவோர் நடை பாதையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்திலும் பொதுப் பாதையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணம் செய் யுமாறு ஆணையம் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் நினைவூட்டியது.

19 May 2019

திடீர்சோதனையில் 20 மின்ஸ்கூட்டர்,  மின்சைக்கிள் ஓட்டுநர்கள் சிக்கினர்

டெக் கீ சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற வயிற்றுப் புற்றுநோய்க்கு எதிரான பரிசோதனையில் பங்கேற்ற 81 வயது மூதாட்டி லியாவ் கிம் யின்னின் கையிலிருந்து ரத்தம் எடுக்கப்படு கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 May 2019

டெக் கீ தொகுதியில் வயிற்றுப் புற்றுநோய்க்கு எதிரான இலவசப்பரிசோதனை