சுடச் சுடச் செய்திகள்

உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளது - பிரதமர்

பொருளியலை மேம்படுத்துவதற்கு நாம் காட்டிய கடின உழைப்பு நல்ல பலன்களைத் தந்திருக்கிறது. அத னால் சிங்கப்பூரர்கள் இவ்வாண்டு தேசிய தினத்தை அதிக மகிழ்ச்சி யுடன் கொண்டாட முடிந்துள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். தெக் கீ தொகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் பேசிய திரு லீ, “இவ்வாண்டு பொருளியல் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 2.5% வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சம் பளங்களை உயர்த்தியுள்ளது, சிங்கப்பூரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள் ளது,” என்றும் கூறினார். “உற்பத்தித்திறனும் அதிகரித் திருப்பது உற்சாகமளிக்கிறது. நமது கொள்கைகள் சரியான திசையில் சென்றுகொண்டிருப் பதை இது காட்டுகிறது.

பொருளி யல் மேம்பட்டுள்ளதால் அனைவரது வாழ்க்கையும் மேம்பட வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. “இந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க நாம் செய்ய வேண்டியவை இன்னும் உள்ளது. வருங்கால பொருளியல் மன்றம் தொழிற்சங் கங்களுடனும் தொழில்துறைகளு டனும் அணுக்கமாகப் பணியாற்றி, எதிர்காலத்தில் வெவ்வேறு துறை களைத் தயார்நிலையில் வைத்தி ருக்க தொழில்துறை மாற்றத் திட் டங்களை வகுத்து வருகிறது,” என்று பிரதமர் விவரித்தார். “வேலையிழந்த ஊழியர்களுக்கு உதவும் வகையில் ஸ்கில்ஸ்ஃபியூச் சர் திட்டம் மூலம் அவர்களுக்கு மறுபயிற்சி அளித்து, ஆற்றல்களை மேம்படுத்த அரசாங்கம் முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. 2,500 குடியிருப்பாளர்கள் திரண்ட நிகழ்ச்சியில் நேற்று திரு லீ, மலாய், மாண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon