ஓய்வுகாலத் திட்டம் பற்றி அதிகமானோர் அக்கறை

ஓய்வு வயதான 55 வயதை அடைந்ததும் தங்கள் மத்திய சேம நிதிக் கணக்கின் சேமிப்புத் தொகையிலிருந்து எவ்வளவு பணத்தை மீட்டுக்கொள்ள முடி யும்; அவ்வாறு அந்த வயதில் மீட்டுக் கொள்ளவில்லை என்றால் கணக்கில் உள்ள தொகைக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்; ‘சிபிஎஃப் லைஃப்’ திட்டத்தில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள் போன்றவை மத்திய சேம நிதி உறுப்பினர்கள் பலரது அக்கறைக்குரிய கேள்விகளாக இருக்கின்றன.

இந்தக் கேள்விகளுக்கும் உறுப்பினர்களின் ஓய்வுக் கால சேமிப்பிலிருக்கும் தொகையைக் கொண்டு எந்த வகையில் மேலும் முதலீடு செய்யலாம் போன்ற கேள் விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் மத்திய சேம நிதிக் கழகம் ‘ஓய்வுகாலத்துக்குத் திட்டமிடு தல்’ எனும் தலைப்பில் சாலைக் காட்சிகளைத் தீவின் வெவ்வேறு இடங்களில் நடத்த முடிவெடுத்து உள்ளது. இத்தகைய சாலைக் காட்சிகள் மூலம் 80,000க்கு மேற்பட்ட உறுப் பினர்களை அடைய கழகம் திட்ட மிட்டுள்ளது.

மத்திய சேம நிதிக் கழகத்தின் சாலைக்காட் சிக்கு வந்த திருவாட்டி இந்துமதி, தனது சந்தே கங்கள் பல வற்றுக்கு விடை தெரிந்து கொண்ட தாகக் கூறினார். படம்: திமத்தி டேவிட்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon