அமெரிக்கத் தீவை வடகொரியா தாக்கினால்

அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் தொலைவில் இடைவெளி ஏவுகணை களால் தாக்குதல் நடத்த திட்டங்களை மேற்கொண்டு வருவதாக வடகொரியா வா‌ஷிங்டனை அச்சுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் பசிபிக் நிலப்பகுதியில் உள்ளதுதான் குவாம்தீவு. ஒருசில நாட்களில் தான் செலுத்தவுள்ள நான்கு ஏவுகணைகளும் ஜப்பானைத் தாண்டிச் செல்லும் என்று கூறியுள்ள பியோங்யாங், ஏவுகணைகள் செல்லும் பாதை உலகின் சுறுசுறுப்புமிக்க பல கடல், ஆகாய மார்க்கங்களைத் தாண்டிச் செல்லும் என்றும் கூறி இருக்கிறது.

வடகொரியாவின் நட்பு நாடாகிய சீனா அது பற்றி இதுவரை எதுவும் கூறாமல் மெளனம் சாதிக்கிறது. இந்தியாவுடன் எல்லைத் தகராறு இருப்பதால் சீனா எதுவும் கூறாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பும் அமைதி காக்கவேண்டுமென்றும் பெய்ஜிங் கூறி உள்ளது. ஜப்பான், தன்னுடைய ராணுவத்தை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் மறைமுகத் திட்டத்தில், வடகொ ரியப் பிரச்சினையைப் பெரிதுப்படுத்துகிறது என்பது சீனா வின் கூற்று.

ஒரு காலத்தில் வட கொரியாவைப் பற்றிக் குறிப்பிட்ட சீனா, தங்கள் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு உதடுகளுக்கும் பற்களுக்கும் இடையிலான அணுக்கம் போன்றது என்று பெருமிதமாகக் கூறியிருந்ததை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘வடகொரியாவும் வா‌ஷிங்டனும் வாய்ச்சண்டையில் தான் ஈடுபட்டுள்ளன’ என்றும் சிலர் கூறுகின்றனர். இருந் தாலும் குவாம் என்பது அமெரிக்காவுக்கு மிக முக்கிய மான ராணுவத்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்குதான் அணுவாயுதச் சக்திமிக்க நீர்மூழ்கிகளை வா‌ஷிங்டன் நிறுத்திவைத்துள்ளது. 1898ஆம் ஆண்டு முதல் குவாம் அமெரிக்காவுக்குச் சொந்தமாக உள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், “குவாம் என்பது அமெரிக்காவின் முக்கிய பகுதி, அதன் அருகிலோ அதன் சுற்றுப்புறத்திலோ வடகொரியா தாக்குதல் நடத்து மாயின் அதை அமெரிக்கா வெறுமனே விட்டு வைக்காது,” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

வடகொரியாவின் தாக்குதலைப் போராகவே வா‌ஷிங்டன் கருதும் என்றும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப் படுமென்றும் கோபத்துடன் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். அதற்குப் பதிலாக அமெரிக்க அதிபர் நம்பமுடியாதவர் என்று வடகொரியா கூறியிருப்பதும் அவருக்கு மேலும் கோபத்தைத் தூண்டியுள்ளது.

இதற்கிடையே, அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் வைட், அதிபர் டிரம்ப் வெற்றுமிரட்டல்களை விடுப்பதாகக் கூறியி ருக்கிறார். அமெரிக்க அதிபருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வடகொரியா கூறிவருவது வா‌ஷிங்டனின் அரசியல் கட்டமைப்பை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று சில கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா உண்மையிலேயே ஏவுகணைகளை அனுப் பித் தாக்குதல் நடத்துமா என்பது கேள்விக்குறிதான் என் றாலும் எதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வடகொரியா எப்போதும் மற்ற நாடுகளை அச்சுறுத்தித் தான் வந்திருக்கிறது. சீனா சொன்னால் அது கேட்கும் என்றுசொல்வது கூட சரியான வாதமாக இருக்க முடியாது. ஏனெனில், வடகொரியாவோ அமெரிக்காவோ எந்தக் காலத்திலும் சீனா சொல்வதைக் கேட்டதாக வரலாறு கிடையாது.

சீனா, அமெரிக்காவையோ வடகொரியாவையோ தக ராற்றிலிருந்து நிறுத்தமுடியாது. வடகொரியாவை ஒரு போதும் சீனா உரிமை கொண்டாடியதுமில்லை என்று வடகொரிய ராணுவ அரசியல் நிபுணர் ஒருவர் கூறி யிருப்பதை சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். அமெரிக்கா அதன் எல்லைக்குள் பாய்ச்சப்படும் ஏவு கணைகளைத் தாக்கி வீழ்த்தும் என்று வா‌ஷிங்டன் கடுமையாக எச்சரித்துள்ளது. ஆனால் வடகொரியாவோ தங்கள் தலைவரின் கட்டளை கிடைத்ததும் குவாமை நோக்கி இன்னும் ஒரு சில நாட்களில் ஏவுகணைகளைப் பாய்ச்சும் என்று மீண்டும் அச்சுறுத்தி உள்ளது. வட கொரியா வா‌ஷிங்டனை அச்சுறுத்த, வா‌ஷிங்டன் பதிலுக்கு பியோங்யாங்கை அச்சுறுத்தியுள்ளது. காலந்தான் எதற்கும் பதில் சொல்ல வேண்டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon