கங்கனா: எதையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது

தனக்கு எதுவும் எளிதில் கிடைத்துவிடவில்லை, எதையும் போராடித் தான் பெற வேண்டியிருந்தது என் கிறார் இந்தி நடிகை கங்கனா ரணாவத். ‘மணிகர்னிகா’ படப்பிடிப்புத் தளத்தில் கங்கனாவுக்கான வாள் சண்டைக் காட்சிகளைப் பட மாக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அதனால் நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டியதால் அவர் சிகிச் சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அண்மையில் அவர் வீடு திரும்பினார்.

இதற்கிடையே, இவர் நடிக்கும் மற்றொரு படமான ‘சிம்ரன்’ வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே, இப்படத்தின் முன் னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் கங்கனா அண்மையில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது சினிமா பாதையும் அதன் பயணமும் வித்தி யாசமானது. இந்த விழாவுக்காக விமானத்தில் வந்து கொண்டிருந்த போது எனக்கு நடந்த பல விஷயங்களைப் பற்றி மனதில் நினைத்துக் கொண்டே வந்தேன். “அப்போது பல கேள்விகள் என்னுள் எழுந்தன. எனது வாழ்க்கைப் பயணம் அசாதாரண மானது. என் வாழ்க்கையில் ஒவ்வொரு வி ஷயமும் போராட்டக் களமாகவே இருக்கிறது. “நான் எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது. அது ஏன் என்று எனக்குத் தெரிய வில்லை. ஒருவேளை அதுதான் என் விதியோ என்று நினைக்கி றேன்,” என்றார்.