சுடச் சுடச் செய்திகள்

ஆண்களுக்கு நிகர் பெண்கள் - நடிகை ஆண்ட்ரியா

‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்குப் பாராட்டுகள் குவிக்கின்றன. இப்படத்தில் அவர் மது குடிக்கும், சிகரெட் பிடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். அவரின் துணிச்சலான இந்த நடிப்புக்குத்தான் பாராட்டு கள் குவிந்து வருகின்றன. ‘தரமணி’ படத்தில் வரும் கருத்துகள் தான் எனது கருத்தும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்வதால் ஆண்களின் ‘ஈகோ’ பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஆண்ட்ரியா.

“இயக்குநர் ராம் உடனான சில சந்திப்பு களிலேயே ‘தரமணி’ தொடங்கியது. இப்படத் தில் எனது கதாபாத்திரம் இவ்வளவு துணிச் சலாக இருக்கும் என முதலில் நான் நினைக்க வில்லை. “மக்களின் வரவேற்பையும் கருத்துகளையும் பார்க்கும்பொழுது நான் எதிர்பார்த்ததைவிட மிகத் துணிச்சலாக இந்தக் கதாபாத்திரம் தோன்றுகிறது. “எனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த இயக்குநர் ராம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். “படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது.

எனது கலைத் திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே எனக்குப் பிடிக்கும். இயக்குநர் ராம் இந்த இரண்டு அம்சங்களையும் மிகவும் மதிப்பவர். “ஒரு படம் பற்றிய அவரது அணுகுமுறையும் மிகவும் யதார்த்தமாக காட்சியமைக்கும் முறையும் எனக்குப் பிடித்திருந்தது. “நடிகர்களுக்கு எதையும் அறி வுறுத்தி திணிக்காமல் அவர்களு டன் படத்தின் கதை, அவர்களது காட்சிகள் பற்றி ஓர் ஆரோக் கியமான விவாதம் நடத்தி புரிய வைத்து அதன் பிறகு படப்பிடிப்பு நடத்துவார்.

“பெண்கள் ஆண்களுக்கு எல்லாவிதத் திலும் சமம் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது. “ஆணைப் போல் ஒரு பெண்ணும் வேலைக்குச் சென்று, சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. “பெண்கள், ஆண்களைச் சார்ந்து வாழும் நிலை மாறி, அவர்கள் தங்களது அன்றாடத் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு உயர்ந்து உள்ளதால் ஆண்களின் ‘ஈகோ’ பாதிக்கப்பட்டு இருக்கிறது. “எனது சொந்த கருத்தைத் தான் ‘தரமணி’ படமும் பிரதி பலிக்கிறது,” என்று துணிச்ச லாகக் கூறுகிறார் நடிகை ஆண்ட்ரியா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon