கென்யாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்

நைரோபி: கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டு அதிபர் கென்யாட்டா மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதைத் தொடர்ந்து அவரின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் அவரது எதிர்ப் பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கார் டயர்களை தீ வைத்துக் கொளுத்துவது வாகனங்களைத் தாக்குவது போன்ற வன்முறைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தேர்தலில் திரு கென்யாட் டாவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் படுவதற்கு முன்பிலிருந்தே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். “ஒடிங்கா இல்லையென்றால் நாட்டில் அமைதி இல்லை,” என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். போலிசார் மீது ஆர்ப்பாட்டக் காரர்கள் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர்.

கென்யாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அதிபரின் எதிர்ப்பாளர்கள் நைரோபியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கார் டயர்களை தீ வைத்துக் கொளுத்தினர். படம்: ஏஎஃப்பி