ஜோகூரில் வெள்ளப்பெருக்கு; 62 பேர் வெளியேற்றம்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து அங்குள்ள இரு ஆறுகளில் நீர் நிரம்பி ஊருக்குள் ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு கருதி 19 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்கள் தங்கியுள்ளனர் என்று ஜோகூர் சுகாதார, சுற்றுப்புற, கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர் அயுப் ரஹ்மாட் கூறினார். கம்போங் புக்கிட் பஜார், கம்போங் ஸ்ரீ ஜெயா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். போலிஸ் படை, சமூக நல இலாகா, தீயணைப்பு இலாகா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் திரு அயுப் கூறினார்.

Loading...
Load next