எம்எல்ஏ வெற்றிவேல்: லஞ்சம் கேட்கிறார் அமைச்சர் சரோஜா

சென்னை: ஒருவருக்கு தாலிக்கு தங்கம் வழங்குவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டுமோ அந்த மொத்த தொகையில் 10 விழுக்காட்டை அமைச்சர் சரோஜா லஞ்சமாக கொடுக்கும்படி கேட் கிறார். இந்தப் பிரச்சினையால் என் தொகுதி மக்களுக்கு இன் னும் தாலிக்கு தங்கம் வழங்கப் படவில்லை என வெற்றிவேல் எம்எல்ஏ புகார் கூறியுள்ளார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25,000 கொடுக்கவேண்டும் என்றால் ரூ.2,500 பணமும் ரூ.50,000 வழங்க ரூ.5,000 பணமும் லஞ்ச மாக வேண்டும் என்று அமைச்சர் சரோஜா கேட்பதாக குற்றம்சாட் டிய வெற்றிவேல், குற்றச்சாட்டு குறித்து முதல்வரிடம் கூறினார்.

“இதுகுறித்து எதுவும் அவசரப் படவேண்டாம். விசாரிக்கிறேன்,” என்று முதல்வர் தெரிவித்துள்ள தாக வெற்றிவேல் கூறினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதர வாளரும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான பி. வெற்றிவேல் எம்எல்ஏ செய்தி யாளர்களிடம் பேசினார். “தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டப் பயனை ஆர்.கே. நகரிலும் எனது தொகுதியிலும் அமைச்சர் சரோஜா இன்னும் முறையாக வழங்கவில்லை. “பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி அணியினர் நீக்கியதாக தீர்மானம் நிறை வேற்றியது செல்லாது.