சுடச் சுடச் செய்திகள்

ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ்: பிலிஸ்கோவா தோல்வி

ஒட்டாவா: ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகள் கனடா வில் கடந்த 7ஆம் தேதி தொடங்கின. ஆடவர் பிரிவுப் போட்டிகள் மாண்ட்ரியல் நகரிலும் பெண் கள் பிரிவு போட்டிகள் டொரோன்டோ நகரிலும் நடை பெற்று வருகின்றன. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் நிலையில் உள்ள பிலிஸ்கோவா, ஆறாம் நிலை வீராங்கனையான வோஸ் னியாக்கியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வோஸ்னியாக்கி 7-5, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் பிலிஸ்கோவாவை வீழத்தினார்.

பெண்கள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் ஐந்தாம் நிலை வீராங்கனையான ஸ்விடோ லினா, ஒன்பதாம் நிலை வீராங் கனையான வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்விடோலினா எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி னார். அதே சுற்றில் நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் இரண்டாம் நிலை வீராங்கனை ஹாலெப்பும் நான்காம் நிலை வீராங்கனை முகுருஸாவும் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன் னேறினர். மூன்றாம் நிலை வீராங்கனை கெர்பர் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீபன்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon