ஒரே ஓவரில் ஆறு விக்கெட்; இங்கிலாந்து சிறுவன் சாதனை

லண்டன்: எதிரணியின் ஆறு விக் கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் லூக் ராபின்சன் என்ற இங்கிலாந்துச் சிறுவன். இங்கிலாந்து நாட்டின் வட கிழக்குப் பகுதியில் உள்ள பில டெல்பியா கிரிக்கெட் குழு சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் லூக் ராபின்சன் என்ற 13 வயது சிறுவன் 6 பந்துகளில் 6 விக்கெட் டுகளைச் சாய்த்தார். அதிலும் அனைத்து விக்கெட்டுகளும் ‘கிளீன் போல்டு’ என்பதுதான் இதில் தனிச்சிறப்பு. மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் லூக்கின் தந்தை ஸ்டீபன்தான் இந்தப் போட்டியின் நடுவர். தனது மகன் விக் கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதை அருகில் இருந்து பார்த்து ரசித் தார் அவர். பிலடெல்பியா கிரிக்கெட் போட் டியின் வரலாற்றில் 149 ஆண்டு கால சாதனை இது என அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சாதனைச் சிறுவன் லூக் ராபின்சன். படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

பங்ளாதேஷ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த வேகப் பந்துவீச்சாளர்
முகமது ஷமியைப் பாராட்டும் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

18 Nov 2019

சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை