போராடி வென்ற ஆர்சனல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தின் முதல் போட்டியில் ஆர்சனல் குழுவிற்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிட்டி விடவில்லை. நேற்று அதிகாலை லெஸ்டர் சிட்டி குழுவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டு இருந்த ஆர்சனல் குழுவிற்கு வெற்றியைத் தேடித் தந்தார் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஒலிவியர் ஜிரூட். ஆட்டத்தில் முதல் கோலைப் போட்டது என்னவோ ஆர்சனல் குழுதான். புதிய வரவான லக்காஸெட் 2வது நிமிடத்திலேயே கோலடித்தார்.

ஆனாலும் வெற்றி கோலைப் போட ஆர்சனல் போராட வேண்டி இருந்தது. ஆர்சனலின் கோலை அடுத்த மூன்று நிமிடங்களிலேயே சமன் செய்தார் லெஸ்டரின் ஒகஸாகி. 29வது நிமிடத்தில் ஜேமி வார்டி புகுத்திய கோலுக்குப் பதில் கோலைப் புகுத்தினார் ஆர்சனலின் டேனி வெல்பெக். வார்டி மீண்டும் கோல் போட லெஸ்டர் 3-2 என மீண்டும் முன்னிலை பெற்றது. கிட்டத்தட்ட ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், ராம்சி, ஜிரூட் ஆகிய இருவரையும் மாற்று ஆட்டக்காரர் ளாகக் களம் இறக்கினார் ஆர்சனல் நிர்வாகி வெங்கர்.

லெஸ்டர் குழுவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஆர்சனல். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி