படிக்கட்டுப் பயணத்தால் மோதல்: பிளேடால் அறுத்த மாணவர்கள்

கரூர்: படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களைப் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் கண்டித்ததையடுத்து, ஆவேசமடைந்த மாணவன் ஒருவன் ஓட்டுநரின் கழுத்தில் பிளேடால் அறுத்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் இருந்து தினமும் மூலிமங்கலம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தில் நேற்று முன்தினம் பயணம் செய்த அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் நீண்ட நேரம் படிக்கட்டிலேயே நின்றிருந்தனர். இதையடுத்து அவர்களை மேலே ஏறி வரும்படி நடத்துநர் ராஜேந்திரன் கண்டிக்க, வாக்குவாதம் முற்றியது. அப்போது ராஜேந்திரனை மாணவர்கள் தாக்க, அவரை மீட்க முயன்றார் ஓட்டுநர் சிவக்குமார். இதனால் மாணவர்களின் கோபம் அவர் மீது திரும்பியது. அவரும் தாக்கப்பட்டுள்ளார். அப்போது ஒரு மாணவன் சிவக்குமாரின் கழுத்தில் பிளேடால் கிழித்துவிட்டுத் தப்பி ஓடினான்.