கல்வித் தரம் உயர்த்தும் உன்னதத் திட்டம்

மும்பையிலிருந்து சுதாஸகி ராமன்

கட்டடத்தின் நுழைவாயிலை அடைந்ததும் பிள்ளைகள் எழுப்பிய சத்தம் காதில் விழுந்தது. வகுப்பு அறையை அடைந்தபோது சிறார் கள் அங்குமிங்கும் ஓடியபடி இருந் ததைக் காண முடிந்தது. வேறு சிலர் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். பாடத்தில் கவனம் செலுத்தாத அந்த மாண வர்களைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் தொடர்ந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். சிங்கப்பூரின் வீவக நான்கறை வீட்டின் வசிப்பறைதான் அந்த வகுப்பறையின் பரப்பளவு. அதில் மூன்று ஆசிரியர்கள், 45 பாலர் களுக்கு எழுத்துகளுடன் பாடல் களையும் கதைகளையும் கற்றுக் கொடுக்கின்றனர்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், மும்பை மாநகரில் தாதர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ‘முக்தாங்கன்’ பள்ளி. ‘பேரகான்’ அறக்கட்டளையின் கீழ் மும்பையில் செயல்படும் ஏழு முக்தாங்கன் பள்ளிகளுள் இதுவும் ஒன்று. இங்கு பாலர் வகுப்புகளில் இருந்து உயர்நிலை வகுப்புகள் வரை மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். வசதிகுறைந்த பிள்ளைகளுக்கு இந்தப் பள்ளிகள் ஆதரவளித்து வருகின்றன. தற்போதுள்ள பாலர் கல்வி கட்டமைப்பின்கீழ் எண், எழுத்துப் பயிற்சிகளில் ஈடுபடுதல், பாடல் களை மனனம் செய்தல் ஆகிய வற்றில் ஈடுபட்டு, தொடக்க நிலைக் கல்விக்குக் குழந்தைகள் தயாராகிறார்கள். இந்தக் கட்டமைப்பை மாற்றி மாணவர்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறைகளின் மூலம் மும்பையில் பாலர் கல்வியின் தரத்தை உயர்த் துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முக்தாங்கன் பள்ளிகளின் நிறுவனர் திருமதி எலிசபெத் மேத்தா, 73.

வசதி குறைந்த பிள்ளைகளுக்கு ஆதரவளித்து வரும் மும்பையின் முக்தாங்கன் பள்ளி, தனது கற்பித்தல் முறையால் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளையும் ஈர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆயினும், அதன் கல்விக் கட்டமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறும் அதன் நிறுவனர் திருமதி எலிசபெத் மேத்தா. படம்: திமத்தி டேவிட்