சுடச் சுடச் செய்திகள்

வெர்ஜினியா வன்முறை; டிரம்ப் மீது குறைகூறல்

வெள்ளை இன தேசியவாதி களின் ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்செயல் தொடர்பாக அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்து குறைகூற லுக்கு ஆளாகி உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்திலுள்ள சார்லாட்ஸ்வில் நகரில் நிகழ்ந்த ஊர்வலத்தின் போது வெள்ளை இன தேசிய வாதிகளும் அவர்களை எதிர்ப்ப வர்களும் மோதிக்கொண்டனர். அது வன்முறையாக மாறி ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்ட னர்.

ராபர்ட் இ லீ என்னும் கூட் டாட்சித் தலைவரின் சிலையை அகற்றும் திட்டத்தைக் கண் டித்து முன்னதாக ‘இமான்சி பேஷன் பார்க்’ என்னம் பூங்கா வில் வெள்ளை இன தேசியவாதி கள் ஒன்றுகூடி ‘வலசாரிகளின் ஐக்கியம்’ என்னும் பேரணியை நடத்தினர். பூங்காவினுள் திரண் டிருந்த அவர்களில் சிலர் இன வாத முழக்கங்களை எழுப்பி னர். அப்போது பூங்காவுக்கு வெளியிலிருந்து கூட்டத்தினரை நோக்கி தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டன. அந்த இடத்திலிருந்து செல் லுமாறு அவர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு தரப் பினரும் ஒருவர் மீது ஒருவர் மிளகுக் கரைசலைப் பீய்ச்சி அடித்ததோடு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட் டது.

கலைந்து சென்ற கூட்டத்தினுள் திடீரென புகுந்த காரும் காயமடைந்து முதலுதவி சிகிச்சை பெறும் மக்களும். காரை ஓட்டிய இருபது வயது ஆடவர் கைது செய்யப் பட்டார். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon