அரச குடும்ப திருமணம்; ஜோகூர் பாரு சாலைகள் மூடல்

ஜோகூர்: மலேசியாவின் ஜோகூர் பாருவில் இன்று நடக்கும் அரச குடும்ப திருமணத்திற்காக பல சாலைகள் மூடப்படுகின்றன. ஜாலான் ஆயர் மொலேக், ஜாலான் யாஹ்யா அவால், ஜாலான் டத்தோ ஒன் ஆகிய சாலைகள் பாதிக்கப்படும் என்று ஜோகூர் போலிஸ் தலைவர் வான் அஹ்மட் நஜ்முடீன் முகமது தெரிவித்தார். இன்று காலை ஏழு மணி முதல் திருமண நிகழ்வு முடியும் வரை சாலைகள் மூடப்பட்டிருக்கும். 318 போலிஸ் அதிகாரிகள் பாது காப்பில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். ஜோகூர் இளவரசி அமினா மைமுனா இஸ்கந்தாரியா சுல்தான் இப்ராஹிமுக்கும் டச்சுக்காரரான டென்னிஸ் முகமது அப்துல் லாவுக்கும் இன்று ஜோகூர் அரச முறைப்படி திருமணம் நடக்கவிருக் கிறது. இதற்கான ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கப் பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon