சுடச் சுடச் செய்திகள்

மூட்டைப்பூச்சி புகார் பற்றி ஸ்கூட் விசாரணை

மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் தான் பயணம் செய்த போது தன்னை மூட்டைப்பூச்சி கடித்துவிட்டதாக பயணி ஒருவர் புகார் தெரிவித்தார். இது பற்றி அந்த விமான நிறு வனம் புலன்விசாரணை நடத்தி வருகிறது. ஸ்கூட் விமானத்தில் தான் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் சென்று பிறகு அங்கிருந்து சிங்கப்பூர் திரும்பியதாகவும் பயணத்தின்போது விமானத்தில் மூட்டைப்பூச்சிகள் தன்னை கைகளிலும் முதுகிலும் கடித்துவிட்டதாகவும் ஜியாமின் ஹான் என்ற பெண்மணி சனிக்கிழமை ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த விமானத்தில் ஒரு சில தடவை தான் பயணம் செய்திருப்பதாகவும் இந்த மூட்டைப்பூச்சி விவகாரம் மிகவும் கவலை தருவதாக இருக்கிறது என்றும் அந்தப் பெண்மணி கவலை தெரிவித்தார். ஸ்கூட் விமானத்தில் மூட்டைப் பூச்சி விவகாரம் பற்றி ஏற்கெனவே பல புகார்கள் உண்டு என்பதையும் அவர் சுட்டினார். அதிகாரிகளுக் குத் தான் அனுப்பிய தகவல்களை அந்த நிறுவனம் அலட்சியப் படுத்திவிட்டது என்றும் அவர் கூறினார். இதன் தொடர்பில் பதிலளித்த ஸ்கூட் நிறுவனம், அந்த மாதுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது. விமான முன்பதிவு, இருக்கை எண் போன்றவற்றை அனுப்பும்படி அவரை நிறுவனம் கேட்டுக் கொண்டது.

இதன்மூலம் புலன் விசாரணை நடத்தி பிறகு அந்த மாதுடன் தொடர்புகொள்ள முடி யும் என்று நிறுவனம் குறிப்பிட்டது. இதற்கிடையே, ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட புகார்கள் தொடர்பில் விசாரணை நடத்தப் பட்டதாகவும் விமானத்தில் மூட்டைப்பூச்சி எதுவும் இல்லை என்றும் ஸ்கூட் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. இருந்தாலும் இந்த விவ காரத்தை முக்கியமானதாகக் கருதி தாங்கள் புலன்விசாரணை நடத்திவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். விமான இருக்கை கள் முறையாக சுத்தப்படுத்தப் படுவதாகவும் அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon