வெளிநாட்டு ஊழியர் மையம் கோரிக்கை

வெளிநாட்டு ஊழியர் மையம் ஒரு முதலாளி தன்னுடைய பங்ளாதேஷ் ஊழியர்கள் 20 பேருக்கு சம்பளம் சரிவரக் கொடுக்கவில்லை என் பதையும் அந்த ஊழியர்களைப் பாதுகாப்பான, ஏற்றுக்கொள்ளத் தக்க இடத்தில் தங்கவைக்கத் தவறிவிட்டது என்பதையும் கண்டு பிடித்திருக்கிறது. அந்த முதலாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளை அந்த மையம் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது. அந்த முதலாளி யார் என்பதை அந்த அமைப்பு தெரிவிக்க வில்லை. இருந்தாலும் அவர் எஸ்ஜேஎச் டிரேடிங் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஷாஜஹான் என்று நம்பப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர் மையம் கேலாங் லோரோங் 13 மற்றும் 17ல் இருக்கும் இரண்டு ஊழியர் விடுதிகளை நேற்று பின்னிரவு நேரத்தில் பார்த்தது. அங்கு தங்கியிருந்த ஊழியர்களுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது.

போதிய சுகாதாரமான சூழ் நிலையும் இல்லை என்பதை மையம் கண்டறிந்தது. அந்த பங்ளாதேஷ் ஊழியர்கள் ஊதியம் தொடர்பில் கோரிக்கை விடுத் திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கை கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்களின் வொர்க்பர்மிட்டுகள் ரத்து செய் யப்பட்டு இருக்கின்றன. இப்படிப் பட்ட சிரமத்திற்கு ஆளாகியிருக் கும் அந்த ஊழியர்கள் பற்றிய விவரங்களை சண்டே டைம்ஸ் செய்தித்தாள் முதலில் வெளியிட்டு இருந்தது.

அந்த ஊழியர்களை பணியில் அமர்த்தும் மூன்று கட்டுமான நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் ஷாஜஹான் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் நிரந்தரவாசியாக இருக் கிறார். அவர் லோரோங் 13 விடுதி யில் தன்னுடைய ஊழியர்கள் அனைவருக்கும் சாப்பாடு சமைத்து கொண்டிருந்ததையும் மையம் கண்டது. இதனிடையே தன் ஊழியர்கள் தன் பெயரைக் கெடுக்க விரும்புவதாக ஷாஜஹான் சண்டே டைம்ஸ் செய் தித்தாளிடம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!