நாளை முதல் எஸ்எம்ஆர்டி நினைவு அட்டைகள் விற்பனை

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் 30வது ஆண்டுவிழா கொண்டாட் டங்களின் ஒரு பகுதியாக பயணி கள் நாளை முதல் வரம்புக்குட்பட்ட NETS FlashPay அட்டைகளை   வாங்கலாம். அந்த அட்டைகள் எஸ்எம்ஆர்டி ரயில் நிலையங்களில் $12 விலைக்கு விற்கப்படும். அட்டை கள் $7 பயண கட்டண மதிப்பு உள்ளவை. எஸ்எம்ஆர்டி ரயில், பேருந்து, டாக்சி ஆகியவற்றின் கலை வடி வங்கள் அந்த அட்டைகளில் இடம்பெற்று இருக்கின்றன. பயணிகள் www.flashpay.nets. com.sg என்ற இணைய முகவரி மூலமாகவும் சிங்கப்பூர் முழுவதும் நடக்கும் NETS FlashPay சாலை காட்சிகளிலும் அவற்றை வாங்க லாம். இந்தத் திட்டத்தில் கலந்து கொள்ளும் வர்த்தகர்களிடம் இருந்து சலுகை விலையிலும் இவற்றைப் பெறலாம்.

சிங்கப்பூரின் போக்குவரத்துச் சந்தையில் எஸ்எம்ஆர்டியுடன் கூடிய பங்காளித்துவ உறவை இந்த அட்டைகள் குறிக்கின்றன என்று நெட்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாஃப்ரி கோ தெரிவித்தார். இந்த அட்டைகள் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை எஸ்எம்ஆர்டி நிறுவனம் தான் தத்தெடுத்துக்கொண்டிருக் கும் பல அறநிறுவனங்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கும். சிங்கப்பூரில் பயனீட்டாளர் களுக்கு இன்னும் சிறந்த எம்ஆர்டி, பேருந்து, டாக்சி சேவை களை வழங்க வேண்டும் என்ற எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தொடர் கடப்பாட்டை இந்த கொண்டாட்ட நினைவு அட்டை கள் புலப்படுத்துவதாக இந்த நிறு வனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெஸ்மண்ட் குவெக் கூறினார்.

எஸ்எம்ஆர்டி ரயில் நியைங்களில் நாளை முதல் NETS FlashPay என்ற இந்த அட்டைகளைப் பயணிகள் வாங்கலாம். படம்: எஸ்எம்ஆர்டி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்