ரசிகர்கள் விருப்பம்; தனுஷ் விளக்கம்

‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார் தனுஷ். இதையடுத்து ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாற்றினார் தனுஷ். அப்போது ‘புதுப்பேட்டை’ தன் மனதை ஈர்த்த படங்களில் ஒன்று எனத் தெரிவித்தார். “அந்தப் படம் என் இதயத்துக்கு நெருக்கமானதும்கூட. அப்படம் தான் என்னை ஒரு நடிகனாக முன்னேற்றியது. அதுவும் எனது சகோதரர் செல்வராகவன் இல்லாமல் நடந்திருக்காது. “காலத்தைக் கடந்து நிற்கும் வெற்றிப் படம் அது. மேலும் ஹாலிவுட்டில் முதன் முதலாக என் படம் ஒன்று விமர்சனம் செய்யப்பட்டதென்றால் அது ‘புதுப்பேட்டை’ தான். இதன் இரண்டாம் பாகம், முதல் பாகத்தைப் போலவே சிறப்பாக அமைய வேண்டும் அல்லது அதற்கும் மேலாக இருக்க வேண்டும். பார்ப்போம், எதிர்காலம் நமக்காக என்ன வைத்திருக்கிறது என்று,” எனக் கூறியுள்ளார் தனுஷ்.

Loading...
Load next