சுடச் சுடச் செய்திகள்

சூரி: என் தந்தை நகைச்சுவை மன்னன்

திரையுலகுக்கு வந்த புதிதில் கடும் பசி, பட்டினியால் அவதிப் பட்டதாகக் கூறியுள்ளார் நடிகர் சூரி. தற்போது நிறைய சம்பாதித் தாலும் விரும்பிய அனைத்தையும் சாப்பிட முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். “ஒரு நடிகருக்கு உடல் கட்டுக்கோப்பாக இருப்பது முக்கியம். அப்போதுதான் 10 ஆண்டுகளுக்கு நாயகனுக்கு நண்பனாக நடிக்க முடியும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவை மூலம் உடலைக் கட் டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். நயன்தாரா உள்ளிட்ட முன் னணி நடிகைகளுடன் டூயட் பாட வேண்டும் என விரும்புகிறாராம் சூரி. அவர்கள் சம்மதித்தால் தானும் நடிக்கத் தயார் என்கிறார். மற்றபடி நாயகனாக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அறவே இல்லை என்று சொல்பவர், நகைச் சுவை நடிகனாகவே நிறைய படங் களில் நடிக்க வேண்டும் என்பது தான் தமது ஆசை என்கிறார். “இப்போது சில நண்பர்கள் எனது நகைச்சுவைக் காட்சிகளை மெருகேற்ற உதவுகிறார்கள். என் நகைச்சுவைக்கு முன்னோடி என் றால் என் தந்தைதான். அவரது நகைச்சுவையில் இன்னும் பத்து விழுக்காட்டைக்கூட நான் சினிமாவில் வெளிப்படுத்த வில்லை. அவர் அப்படியொரு நகைச்சுவை மன்னன்,” என்கிறார் சூரி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon