சுடச் சுடச் செய்திகள்

ஓவியாவுக்குப் பதிலாக பார்வதி நாயர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு ‘சீதக்காதி’ எனப் பெயர் வைத்துள்ளனர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்குப் பிறகு பாலாஜி தரணீதரன் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசனும் காயத்ரியும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது நாயகியாக தற்போது பார்வதி நாயரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் ‘பிக்பாஸ்’ புகழ் ஓவியா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அவரால் நடிக்க முடியவில்லையாம். இதையடுத்து பார்வதி நாயர் உள்ளே நுழைந்திருக்கிறார். கதைப்படி மூன்று நாயகிகளுமே சினிமா நடிகைகளாக நடிக்கின்றனராம். முன்னாள் நாயகி அர்ச்சனா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஏற்றுள்ள கதாபாத்திரம் வழக்கம் போல் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon