இலங்கையைப் பந்தாடியது இந்திய அணி

பல்லகெலே: இலங்கை கிரிக்கெட் அணியை முதல் இன்னிங்சில் 135 ஓட்டங்களுக்கு சுருட்டியது இந்திய அணி. கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இலங்கையின் அனைத்து விக்கெட் டுகளையும் கைப்பற்றியது இந்தியா. குல்திப் யாதவ் 4 விக்கெட்டு களையும் சமி, அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணித் தலைவர் சந்திமால் அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் எடுத்தார். மற்றவர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் 352 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இலங்கை ‘பாலோ-ஆன்’ ஆனது. அதனால் இரண்டாவது இன் னிங்சை விளையாடி இலங்கை அணி, 13 ஓவர்கள் முடிந்த நிலை யில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ஓட்டங்கள் எடுத்தது. நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்று இரண்டாம் நாள் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 96 பந்துகளில் 108 ஓட்டங் களைக் குவித்த பாண்டியா, தில்ரூவான் பந்தில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் லக் ஷ்ன் சந்தகன் ஐந்து விக்கெட்டுகளையும் மலிந்த புஷ்பகுமாரா 3 விக்கெட்டு களையும் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon