சுடச் சுடச் செய்திகள்

செல்சி அதிர்ச்சி தோல்வி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் நடப்பு வெற்றியாளரான செல்சி இந்த பருவத்தின் முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவி யது. தனது சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் பர்ன்லியை எதிர்கொண்ட செல்சியின் தோல் விக்கு அதன் விளையாட்டாளர்கள் இருவர் சிவப்பு அட்டை பெற்றது தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் முதல் பாதி ஆட்டத்திலேயே மூன்று கோல் களையும் போட்டுவிட்டது பர்ன்லி. அதேசமயம் கோல் எதுவும் போடுவதற்கு முன்னாலேயே அதா வது 14வது நிமிடத்திலேயே ஸ்டீவன் டிஃபோருடன் மோதலில் ஈடுபட்டதால், செல்சி குழுத் தலைவர் கேரி கேஹில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். அதைத் தொடர்ந்து 24, 43வது நிமிடங்களில் 2 கோல்களைப் புகுத்தினார் பர்ன்லியின் சேம் வோக்ஸ். இதற்கிடையே 39வது நிமிடத்தில் மற்றோர் கோலைப் புகுத்தினார் வார்ட். முற்பாதி ஆட்டம் முழுவதும் செல்சி கோல் எதுவும் போடாத நிலையில், அக்குழுவின் புதுவர வான அல்வேரோ மொராட்டா பிற் பாதி ஆட்டத்தின் 69வது நிமிடத் தில் முதல் கோலைப் புகுத்தினார். அதன் பிறகு செல்சியின் அண்ட்ரியாஸ் கிறிஸ்டியன்சென் புகுத்திய பந்து ‘ஆஃப்சைட்’ என் பதால் கோலாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதனால் செல்சியின் கோல் எண்ணிக்கை இரண்டாக அதிகரிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon