இரு தினங்களுக்கு நீடிக்கப்போகும் மழை

தமிழகத்தில் இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்க ளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிக பட்சமாக திருவண்ணா மலை மாவட்டம் போளூ ரில் 14 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: தகவல் ஊடகம்