சுடச் சுடச் செய்திகள்

காத்துக் கிடக்கும் எதிரிகள்: சசிகலா திடீர் எச்சரிக்கை

பெங்களூரு: காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் வகை யில் ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என அதிமுக தொண்டர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா  நடரா ஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பெங்க ளூரு சிறையில் இருந்தபடியே அதிமுகவினருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அதிமுக எனும் கோட்டையில் ஏதேனும் விரிசல் விழாதா? என எதிரிகள் காத்திருப்பதாகத் தெரி வித்துள்ளார். இந்தியாவில் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுக சிறிதளவும் கீழே இறங்கிவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், முன்னை விட உறுதியாய் கழகத்தையும் தமிழகத்தையும் காக்க எம்ஜிஆர் நூற்றாண்டில் அதிமுகவினர் உறுதியேற்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

“உழைப்பும் உண்மையும் விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்ட ரும் அடைய முடியும் என்பதே ஜெயலலிதா அதிமுகவின் வாயிலாக பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். “சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு உயர் பதவிகளை எட்டுவது என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியமா கும்,” என சசிகலா தமது கடிதத் தில் சுட்டிக்காட்டி உள்ளார். எத்தனையோ நெருக்கடிக ளைக் கடந்து இறுதிவரை சிறுபான்மையினரின் நலனை விட்டுக் கொடுக்காத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா வழி நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று எதிரி களைப் பார்த்து அறைகூவல் விடுத்தவர் ஜெயலலிதா என நினைவுகூர்ந்துள்ளார்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon