கஞ்சிக் கலயம் சுமந்த பெண்கள்: மழைக்காக பிரார்த்தனை

நெல்லை: தமிழத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் வறட்சி அதிகரித்தது. இந்நிலை யில் நெல்லை மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டி பெண்கள் கஞ்சிக் கலயம் சுமந்து பிரார்த்தனை மேற் கொண்டனர். நெல்லையில் இந்த ஆண்டும் பரவலாக மழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு கிடப்பதால் அம்மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. மழை பெய்ய வேண்டி பலரும் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடு பட்டு வருகின்றனர். அந்த வகை யில் ராதாபுரத்தைச் சேர்ந்த ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தின் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது மழை பெய்ய வேண்டி பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் பிரார்த்தனையில் பங்கேற்ற பெண்கள் மழை பெய்ய வேண்டி கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்து ஆதிபராசக்தி கோவிலை வலம் வந்தனர். பின்னர் கஞ்சிக் கலயங்களை அம்மனுக்கு படையலிட்டு வழிபட் டனர். இதையடுத்து கஞ்சியானது பெரிய பாத்திரத்தில் கலக்கப்பட்டு, பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மழை பெய்ய வேண்டி நெல்லை ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்து வலம் வந்த பெண்கள், குழந்தைகள். படம்: தமிழக ஊடகம்