ஜிஎஸ்டி எதிரொலி: தங்க விற்பனை சரிவு

கோவை: ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக நாட்டில் தங்க நகை களின் உற்பத்தியும் விற்பனையும் பெரும் சரிவு கண்டுள்ளதாக கோயம்புத்தூர் தங்க ஆபரண உற்பத்தியாளர் சங்கத்தின் தலை வர் முத்து வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு நூறு கிலோ என்று இருந்த தங்க நகை உற்பத்தியானது, தற்போது 50 கிலோ எனப் பாதியாக குறைந்துள் ளது என்றும் நகை விற்பனை 30 விழுக்காடு அளவுக்கு குறைந்துள் ளது என்றும் அவர் கூறுகிறார். இத்தகைய சரிவு காரணமாக கோவையில் உள்ள 55 ஆயிரம் பொற்கொல்லர்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப் பிடும் அவர், தற்போது மாதத்தில் 18 நாட்கள் மட்டுமே பொற் கொல்லர்களுக்கு பணி இருப்ப தாகத் தெரிவித்துள்ளார். “கோவையில் உருவாக்கப்படும் தங்க ஆபரணங்கள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. தரம், நம்பிக்கை, தூய்மையான தங்கம் ஆகியவையே எங்களது வெற்றிக்கான காரணம். “ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவ தற்கு முன்பு ரூ.10 கோடி விற்பனை அளவுக்கு ஒரு விழுக்காடும் அதற்கும் மேல் 2 விழுக்காடும் வரி விதிக்கப்பட்டது. “தற்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், பிஸ் கெட்டுகள், வைர நகைகள், கற்கள் ஆகியவற்றுக்கு 3 விழுக்காடு வரி விதிக்கப் பட்டுள்ளது,” என்கிறார் முத்து வெங்கட் ராமன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon