மூக்கணாங்கயிறு போட்டு அடக்குவோம்: தினகரன்

மதுரை: அதிமுகவில் சிலர் தற்போது தறிகெட்ட நிலையில் உள்ளனர் என்றும் அவ்வாறு அடங்காமல் செல்லும் காளைகளை மூக்கணாங்கயிறு போட்டு அடக் கப் போவதாகவும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். யாருடைய மிரட்டலுக்கும் பயப்படப் போவதில்லை என மேலூ ரில் செய்தியாளர்களிடம் பேசுகை யில் அவர் குறிப்பிட்டார். நடப்பு அதிமுக ஆட்சி ஜெயலலிதா வகுத்த பாதையில் செல்லும்வரை ஆபத்தில்லை என்று தெரிவித்த அவர், பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆட்சிக்கு ஆபத்தாகத்தான் முடி யும் என எச்சரிக்கை விடுத்தார். “அதிமுகவை ஒன்றுபடுத்தி, இரட்டை இலை சின்னத்தை கண் டிப்பாக பெறுவோம். நாடாளுமன்றத் தேர்தலில் நமது இயக்க வேட்பா ளர்கள் இரட்டை இலை சின்னத் தில்தான் போட்டியிடுவார்கள். அதற்கு ஏற்ப கட்சியை பலப்படுத் தும் வகையில் செயல்பட்டு வருகிறோம். “கட்சிக்காக பேசும்போது எங் களை பேசவிடாமல் தடுக்கிறார்கள். சிலரின் செயல்பாட்டால்தான் நாங் கள் பதில் சொல்ல வேண்டி உள் ளது. அதையும் பெருந்தன்மையாக யாரையும் தாக்காமல் பதில் சொல்கிறோம். அதை எதிர் கொள்ள முடியாதவர்கள் பதிலுக்கு பேசுகிறார்கள்,” என்றார் தினகரன்.

 

 

Loading...
Load next