பிரதமருடன் சந்திப்பு: அணிகள் இணைப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை அடுத்து, அதிமுக வின் இரு அணிகளும் இணைவது உறுதியாகி இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். பிரதமர் மோடியை தமது அணி யின் நிர்வாகிகளுடன் நேற்று சந்தித்தார் ஓபிஎஸ். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பிரதமருடன் கலந்து ஆலோசித்ததாக அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவை யடுத்து அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக பிளவு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் ஓர் அணி உருவானது.

அடுத்த திருப்பமாக சசிகலா அணியில் சச்சரவு ஏற்பட்டு முதல்வர் பழனிசாமி தலைமையில் மற்றொரு அணி உருவெடுத்தது. சசிகலா ஆதரவாளர்கள் டிடிவி தினகரன் தலைமையில் தனி அணியாகச் செயல்பட்டு வருகின் றனர். இந்நிலையில் பாஜக தலைமை சசி, தினகரன் அணியைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகளின் இணைப்புக்கு பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளும் இணையும் பட்சத்தில் அதுவே உண்மையான அதிமுக என தொண்டர்கள் ஏற்பார்கள் எனக் கருதப்படுகிறது.

இது சாத்தியமானால் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று பட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் இருவரிடமும் அணிகள் இணைப்பு குறித்து பிரதமர் மோடியே நேரடி ஆலோச னையில் ஈடுபட்டதாகவும் அப் போது இயன்றளவு விரைவில் இரு அணிகளும் இணைய வேண் டும் என வலியுறுத்தியதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பன் னீர்செல்வம், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் விவரித்ததாகக் கூறினார்.