அமெரிக்க ஆகாயப் போர் பயிற்சியில் சிங்கப்பூர்

அமெரிக்க ஆகாயப்படை ஏற்பாடு செய்திருக்கும் ‘ரெட் ஃபிளாக்- நெல்லிஸ்’ என்ற ஆகாயப் போர் பயிற்சியில் சிங்கப்பூர் பங்கேற்க வுள்ளது. ஆகஸ்ட் 14 தொடங்கி 25 வரை நடைபெறும் பெரிய அளவிளான இந்தப் போர் பயிற்சி நெவாடாவில் உள்ள நெல்லிஸ் விமான தளத்தில் நடத்தப்படும். சிங்கப்பூர் ஆகாயப்படையின் F-=15SG ரக எட்டு போர் விமானங்களும் இடாஹோ மலைப்பகுதியிலுள்ள ஆகாயப் படைத் தளத்தின் ‘பீஸ் கார்வின் V’ பிரிவின் 100க்கும் மேற்பட்ட ஆகாயப்படை வீரர்களும் இதில் பங்கேற்பர் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. சிங்கப்பூருடன் சவூதி அரேபியா, அமெரிக்காவும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. மேலும் சிலி, ஓமான், ருமேனியா ஆகிய நாடுகள் இப்பயிற்சியின் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றன.

இந்த தீவிரமான ஆகாயப் போர் பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈடுபடுத் தப்படும். இதில் சவூதி அரேபியா வின் ‘யூரோ ஃபைடர் டைஃபூன்’ (EF-2000) போர் விமானங்களும் அமெரிக்காவின் F-22, F-16C/D, F/A-18C/D போர் விமானங்களும் ஆகாயத் தாக்குதலை முன் கூட்டியே அறிந்து எச்சரிக்கக் கூடிய E-3A விமானங்களும் இடம்பெறும். சவால்மிக்க, உண்மை நிலைக்கு ஒத்த பயிற்சித் தொட ரில் பங்கேற்கும் நாடுகள் ஈடு படும். போர்க் காலத்தில் விமானி கள் துரிதமாக செயல்படவும் போர் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் இப்பயிற்சி ஆகாயப் படை வீரர்களைத் தயார்படுத்தும்.

1992ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் ஆகாயப்படை இப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. அமெரிக்காவுடனான சிங்கப் பூரின் சிறந்த, நீண்டகால தற்காப்பு உறவை இது மேலும் காட்டுகிறது என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு கூறியது. மேலும் இந்தப் போர் பயிற்சி மற்ற நாடுகளின் ஆகாயப் படைகளுக்கு ஈடாக சிங்கப்பூர் தன்னை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும் என்றும் அமைச்சு விளக்கியுள்ளது.

F-15SG ரக போர்விமானம். படம்: தற்காப்பு அமைச்சு

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு. படம்: நீதிமன்ற ஆவணங்கள்

15 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’