பேராசிரியர் உல்ரிச் வெர்னர் சூட்டருக்கு கௌரவ குடியுரிமை

சிங்கப்பூரைத் துடிப்புமிக்க, பிரபல மான ஆய்வு மேம்பாட்டு மையமாக உருவாக்கியதற்காக சுவிட்சர் லாந்து நாட்டைச் சேர்ந்த 73 வயது பேராசிரியர் உல்ரிச் வெர்னர் சூட்டருக்கு சிங்கப்பூர் கௌரவ குடியுரிமை வழங்கிச் சிறப்பித் துள்ளது. அதிபர் டோனி டான் கெங் யாம் நேற்று அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந் தின் சூரிச் மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சூட்டருக்கு கௌரவ குடியிரிமையை வழங்கினார். கௌரவ குடியுரிமை என்பது சிங்கப்பூர் குடியுரிமை அல்லாதவர் களுக்கு வழங்கப்படும் ஆக உயர்ந்த அங்கீகாரமாகும். சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தலைசிறந்த பங் காற்றிய தனிமனிதர்களுக்கு அரசாங்கம் இந்த கௌரவக் குடியுரிமையை வழங்கும். தேசிய ஆய்வு அறநிறுவனத் திற்குத் தலைமை தாங்கும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், பேராசிரியர் சூட்டரை சிங்கப்பூரின் நெருங்கிய நண்பர் என்று கூறினார். “சிங்கப்பூரின் அறிவியல் ஆய்வுத் துறையை மேம்படுத்துவ தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியர் சூட்டர் தமது அறிவாற்றலையும் நேரத்தையும் அளித்துள்ளார்,” என்று திரு டியோ தெரிவித்தார். சிங்கப்பூர் ஆய்வுத் துறையின் உன்னதத்திற்கு அடித்தளம் அமைத்ததில் மூலப்பொருள் அறி வியலில் துறையில் முதன்மையான வராகத் திகழும் பேராசிரியர் சூட்டர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று தேசிய ஆய்வு அறநிறுவனம் குறிப்பிட்டது.

இடமிருந்து இரண்டாவதாக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், பேராசிரியர் உல்ரிச் வெர்னர் சூட்டர், அதிபர் டோனி டான் கெங் யாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்