இருவருக்கு ஸிக்கா தொற்று

சிராங்கூன் நார்த் அவென்யூ 1, புளோக் 143, சிராங்கூன் வில் ஆகிய இடங்களில் இருவருக்கு ஸிக்கா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. இருவரும் அந்த வட்டாரத்தில் குடியிருப்பவர்கள். தொற்று ஏற்படுவதற்கு முன்பே இந்த வட்டாரத்தில் வாரியம் கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது. இது வரையில் 11 கொசு பெருக்க இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழு வீடுகள், நான்கு பொது இடங்கள். கொசுப் பெருக்கமுள்ள பகுதிகளை அழிக்குமாறும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் குடியிருப் பாளர்கள் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். ஸிக்கா தொற்று இருந்தால் பெரும்பாலும் அறிகுறிகள் தென்படாது. எனவே ஸிக்கா மீண்டும் பரவும் ஆபத்துள்ளது. காய்ச்சல், உடலில் தடிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரைக் காணுமாறு வாரியம் அறிவுறுத்துகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon