சதி செய்தார்: மஞ்சுவைச் சாடும் திலீப்

நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமது முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரின் சதியால் தாம் சிக்கியுள்ளதாக மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் பிணை கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை கடத்தப்பட்ட சம்பவத்திற்கு மறுநாள், மலையாள நடிகர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்றும் அதில் பங்கேற்ற மஞ்சுவாரியார் தன்னை இந்தக் குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் கருத்துகளை தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். “இந்தச் சதியில் என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி நடந்தது. அதில், நான் மாட்டிக்கொண்டேன். “மஞ்சு வாரியார், அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீகுமார் மேனன் குறித்து சில முக்கிய தகவல்களை போலிசாரிடம் விசாரணையின் போது தெரிவித்தேன். ஆனால் அதைப் பதிவு செய்யவில்லை,” என திலீப் மேலும் கூறியுள்ளார்.