மேன்யூ கோல் மழை; சுருண்டது வெஸ்ட் ஹேம்

மான்செஸ்டர்: இந்தப் பருவத் துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை மான்செஸ்டர் யுனைடெட் அபாரமான முறையில் தொடங்கி வைத்துள்ளது. வெஸ்ட் ஹேம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் மழை பொழிந்த யுனைடெட் 4=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. யுனைடெட்டுக்கான இங் கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் முதல்முறையாகக் களமிறங்கிய ரொமேலு லுக்காகு சொந்த ரசிகர்களுக்கு முன்பு அதிரடியாக விளையாடி இரண்டு கோல்களைப் போட்டார். ஆட்டத்தின் 33வது நிமிடத் திலும் 52வது நிமிடத்திலும் அவர் போட்ட கோல்கள் வெஸ்ட் ஹேம் ஆட்டக்காரர்களைக் கதி கலங்க வைத்தது. மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஆண்டனி மார்ஷல் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் யுனைடெட்டின் மூன்றாவது கோலைப் போட்டார். ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது யுனை டெட்டின் பால் பொக்பா தொலைவிலிருந்து அனுப்பிய பந்து வலைக்குள் பாய்ந்தது. இறுதி வரை யுனைடெட்டுக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் திணறியது வெஸ்ட் ஹேம். ஓல்ட் டிராஃபர்ட்டில் 14 முறை லீக் போட்டியை யுனைடெட் தொடங்கி வைத்துள்ளது. அவற்றில் ஒரே ஒருமுறை மட்டும் யுனைடெட் தோல்வி அடைந் துள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ரொமேலு லுக்காகு (வலது) வலை நோக்கி அனுப்பிய பந்தைப் பாய்ந்து தடுக்கும் வெஸ்ட் ஹேம் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட். இருப்பினும், யுனைடெட்டின் நான்கு கோல்களை ஹார்ட்டால் தடுக்க முடியாமல் போனது. படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon