சுடச் சுடச் செய்திகள்

தென்கிழக்காசிய விளையாட்டு - காற்பந்து: சிங்கப்பூர் தோல்வி

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அதன் முதல் காற்பந்து ஆட்டத்தில் சிங்கப்பூர் நேற்று மாலை தோல்வியைத் தழுவியது. சிலாயாங் விளையாட்டரங் கத்தில் மியன்மாரைச் சந்தித்த சிங்கப்பூர் 2=0 எனும் கோல் கணக்கில் வீழ்ந்தது. முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களும் கோல் போடும் முனைப்புடன் இருந்தன. இருப்பினும், இரு குழுக்களின் தற்காப்பு அரண்கள் பிடிவாதமாக இருக்க முதல் பாதி ஆட்டம் கோல் ஏதும் இன்றி முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இடைவேளைக்கு சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்த போது மியன்மாரின் முதல் கோல் புகுந்தது. மியன்மார் ஆட்டக்காரர் ஒருவர் வலை நோக்கி அனுப்பிய பந்து சிங்கப்பூர் தற்காப்பு ஆட்டக்காரர் மீது பட்டு மியன்மாரின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் ஆங் தூவிடம் சென்றது. நெருக்கடி தர சிங்கப்பூர் வீரர்கள் யாரும் அவர் அருகில் இல்லாத நிலையில், அவர் நிதானமாகப் பந்தை வலைக்குள் சேர்த்து சிங்கப்பூர் குழுவை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இடைவேளையின்போது மியன் மார் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon