பர்கினா ஃபாசோ உணவக தாக்குதலில் 20 பேர் பலி

ஒளகடோவுகோவ்: மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாசோவில் உள்ள ஓர் உணவகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியானதாகவும் 8 பேர் காயம் அடைந்ததாகவும் அரசாங் கம் தெரிவித்துள்ளது. பர்கினோ ஃபாசோவின் தலைநகரான ஒளகடோவுகோவில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளி யில் அமர்ந்திருந்த வாடிக்கை யாளர்களை நோக்கி ஞாயிற்றுக் கிழமை மூன்று துப்பாக்கிக்காரர் கள் கண்மூடித்தனமாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய துப்பாக்கிக்காரர்கள், அந்த உணவகத்தில் இருந்தவர் களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த மூன்று துப்பாக்கிக்காரர் களையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இருப்பினும் இன்னும் சிலர் அந்த உணவக கட்டடத்திற்குள் சிக்கி இருப்பதாக தொடர்புத் துறை அமைச்சர் ரெமிஸ் டான்ஜினோவ் கூறினார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை என்று அவர் சொன்னார். பாதுகாப்புப் படையினரும் மின்னல் படை வீரர்களும் துப்பாக்கிக்காரர்கள் யாரேனும் உணவகத்தினுள் பதுங்கியுள்ள னரா என்பதை அறிய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள தாகவும் அமைச்சர் கூறினார்.

 

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஒரு பெண்ணுக்கு மற்றவர்கள் உதவுகின்றனர். துப்பாக்கிக்காரர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்கத் தொடங்கியதுமே உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.