வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளக்கூடும்

வா‌ஷிங்டன்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வார் என்ப தில் சந்தேகமே இல்லை என்றும் இதனால் மீண்டும் அத்தகைய சோதனை மேற்கொண்டாலும் அது தனக்கு வியப்பாக இருக்காது என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கப்போவதாக வடகொரியா விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். வடகொரியாவின் நட்பு நாடான சீனா, வடகொரியாவுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்றும் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் மைக் போம்பியோ, வா‌ஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது வடகொரியா மீது அமெரிக்கா அணு ஆயுதப்போர் நடத்துவதற்கான உடனடி காரணங் கள் எதுவும் இல்லை என்று கூறினார். இருப்பினும், அமெரிக்கா பொறுமையான வழிமுறைகளைக் கையாளக்கூடாது எனவும் அவர் கூறினார்.

Loading...
Load next