மீண்டும் முதலிடத்தில் நடால்

சின்சினாட்டி: டென்னிஸ் உலகத் தரவரிசையில் மூன்றாண்டுகளுக் குப் பின் முதலிடத்தில் அமர்கிறார் ஸ்பெயினின் ரஃபாயல் நடால். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நேற்று முன்தினம் தொடங் கிய வெஸ்டர்ன் & சதர்ன் ஓப்பன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, இம்மாதம் 21ஆம் தேதி வெளியாகவுள்ள தரவரிசைப் பட்டியலில் நடால் முதலிடத்திற்கு முன்னேறுவது உறுதியாகி இருக்கிறது.

இதுபற்றிக் கருத்துரைத்த நடால், “ஃபெடரர் இந்தப் போட்டி யில் விளையாடாதது வருத்தம் தான். ஆயினும், நான் மீண்டும் முதலிடத்திற்கு வரவிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார். கடைசியாக 2014 ஜூலை 6ஆம் தேதி அவர் தரவரிசையில் முதல் நிலையில் இருந்தார்.