கவுன்டி போட்டிகளில் அஸ்வின்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (படம்) முதல் முறையாக கவுன்டி போட்டிகளில் விளையாடவுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் அஸ்வின். இந்த நிலையில், அந்த அணிக் கெதிராக அடுத்து நடக்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அவர் இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் போட்டித் தொடரான கவுன்டி போட்டிகளில் வோஸ்டர் ‌ஷியர் அணிக்காக விளையாட இருக்கிறார் என்பதை இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இம்மாதம் 28ஆம் தேதி குளோஸ்டர்‌ஷியர் அணிக்கெதிராக நடக்கவுள்ள இரண்டாம் நிலைப் போட்டியில் இருந்து அஸ்வினின் கவுன்டி பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இந்திய டெஸ்ட் அணி வீரர் சேத்தேஸ்வர் புஜாரா வும் கவுன்டி போட்டிகளுக்குத் திரும்புகிறார். அவர் நாட்டிங்கம் ‌ஷியர் அணியைப் பிரதிநிதிப்பார். அடுத்த மாதம் 5ஆம் தேதி நாட்டிங்கம்‌ஷியர் = வோஸ்டர் ‌ஷியர் அணிகள் மோதிக்கொள்ள இருப்பதால் அஸ்வினும் புஜாரா வும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாட இருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon