நீர்ப்பந்து: சிங்கப்பூர் வெற்றித் தொடக்கம்

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை சிங்கப்பூர் மகளிர் நீர்ப்பந்துக் குழு வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூர்க் குழு நேற்று தனது முதல் ஆட்டத்தில் 7=6 என்ற கோல் கணக்கில் இந்தோனீசியாவை வென்றது. இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் மலேசிய வீராங்கனைகளை சிங்கப்பூர் மகளிர் எதிர்கொள்கின்றனர். 2011ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் தங்கம் வென்ற சிங்கப்பூர்க் குழு, 2015ல் தாய்லாந்திடம் தங்கத்தை இழந்தது. 2013 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீர்ப்பந்தாட்டம் சேர்க்கப்படவில்லை.